பிரித்தானியாவில் 5,765 பேருக்கு கொரோனா தொற்று,13 இறப்புக்கள் பதிவு

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 5,765 பேருக்கு கொரோனா தொற்றும் 13 இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 45 இலட்சத்து 11 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது.