தமிழ் மொழியை புறக்கணித்த அங்கர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை: பிரான்ஸ் அரசு வெளியிட்ட தகவல்!

இன்று, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலில் சில இடங்களில் 75 மி.மீ மழை வீழ்ச்சியும் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலில் சில இடங்களில் 50 மி.மீ அளவான அதிகமானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 995 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்காணிப்பதற்கும் கரையோர சமூகங்களிற்கும் கடல்வாழ் உயிரினங்களிற்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கணிப்பிடுவதற்கும் உலக நாடுகள் இலங்கைக்கு உதவவேண்டும் என இலங்கைக்கான ஐக்கியநாடுகள் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்காக வழங்கப்பட்டு வந்த ஸ்டிக்கர்களுக்கு பதிலாக நாளை முதல் புதிய ஸ்டிக்கர் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஹிரு தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பான சலகுன நிகழ்ச்சியில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிடம் கேள்விகளை எழுப்பி, பொலிஸ் ஊடகப் பேச்சாளரை நிர்க்கதிக்குள்ளாகியதற்காக தான் கடும் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தற்போது வாழ்ந்து வருவதாக பிரபல சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்துள்ளார் .

மட்டக்களப்பு ஆயித்தமலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த ஒருவரை கடந்த 4 திகதி அன்று கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

திருந்துங்கள் அல்லது போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள் என தமிழ் மொழியை புறக்கணிப்புச் செய்த அங்கர் நிறுவனத்திற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ்சில் தமிழர் தாயக பூமியான இலங்கையின் வடக்கு ,கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பூர்வீக தாயகமாக அங்கீகரிக்கும் நிலைப்பாடு இந்தியாவின் அனுமதியுடனேயே செயற்படுத்தப்பட்டிருக்க கூடும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்

கொழும்பு – பொரள்ளை பகுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் எட்டு பேர் காயமடைந்துள்ள நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பாஜக ஆட்சி முடிந்து 2024-ம் ஆண்டு தேர்தல் வரும்போது புதிய வேளாண் சட்டங்கள் நிச்சயம் இருக்காது. இந்த சட்டங்களை வாபஸ் பெற பாஜக ஒப்புக் கொள்ளும். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த சட்டம் இருக்காது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து போராடுவோம். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை விவசாயிகள் போராட்டம் டெல்லியில் தொடரும் என்று பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் தலைவர். ராகேஷ் டிகைத் கூறினார்.

கரோனா பெருந்தொற்று காரணமாக பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ததுபோல், நீட் உள்ளிட்ட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சவூதி அரேபியாவில் நடந்த விபத்தொன்றில் அங்கு அல் மராய் நிறுவனத்தில் கடமையாற்றும் இலங்கை ஏறாவூரைச் சேர்ந்த 38 வயதான சுலைமாலெப்பை ஹமீட் சபீர் என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகளவில் 200 கோடி, ‘டோஸ்’ தடுப்பூசி மருந்தில் பெரும் பங்கை, இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் பெற்றுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா- வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 57 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா-வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.10 லட்சத்தை நெருங்குகிறது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டு ஜனாதிபதி மொஹமட் புஹாரி அண்மையில் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து நீக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கம்போடிய நாட்டில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றிய எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கெவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க எலி வகை மாகவா நிலக்கண்ணி வெடிகளை அகற்றக்கூடியது அந்த எலியை கம்போடியா கொண்டு வந்து கடந்த ஏழு வருடங்களில் 39 நிலக்கண்ணி வெடிகளை அகற்றியுள்ளனர். வெடிக்காத 28 பொருட்களையும் மாகவா அகற்றியுள்ளது. அதோடு, 1 லட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர அடிகளை மாகவா தோண்டியுள்ளது. இது 20 கால்பந்து ஆடுகளங்களுக்கு சமமானதுஎனவே .எலியின் அரும்பணியை பாராட்டும் விதமாக இங்கிலாந்தின் கால்நடை அமைப்பு மாகவா எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கியுள்ளது.

தற்போதைய உலகின் நவீன வாழ்க்கை முறைக்கமையை ஒவ்வொருவரின் நேரமும் முக்கியமானதொன்றாக இருக்கின்றது.

அந்த வகையில் இலங்கை, இந்தியா உட்பட்ட உலக நடப்புக்களை அறிந்துகொள்ள ஒவ்வொருவரும் ஆவலாக உள்ளனர், ஆனால் விரிவாக ஒவ்வொரு விடயத்தையும் அறிந்துகொள்ள பல மணி நேரங்கள் தேவைப்படுகின்றன.

இதனடிப்படையில் ஒவ்வொரு வாசகர்களும், பார்வையாளர்களும் சுருக்கமாகவும், வேகமாகவும் உலக விடயங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு நாளும் 09.AM -12.PM – 03PM மற்றும் 06.PM போன்ற நேரங்களில் News247 Samugam என்கின்ற YOUTUBE சனல் ஊடாக நீங்கள் பார்வையிடலாம்.

அந்த வகையில் காலை 09.AM மணிக்கான செய்தி சுருக்கத்தின் காணொளிதான் மேலுள்ளது.