யாழ்.குடாநாட்டில் மேலும் 05 பேருக்கு கொரோனா!

யாழ்.குடாநாட்டில் மேலும் 05 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த இரவு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03பேர் (02 பேர் தொற்றுநோய் அறிகுறிகளுடன் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காகச் சென்றவர்கள், ஒருவர் தனிமைப்படுத்தல் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்)

யாழ்.போதனாவில் ஒருவர் (தனிமைப்படுத்தல் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்),

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர் (தனிமைப்படுத்தல் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்) தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்