ஆமைகள், டொல்பின் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின!

உயிரிழந்த 6 ஆமைகளும், டொல்பின் ஒன்றும் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

தெஹிவளை, பயாகல, இந்துருவ, கொஸ்கொட உள்ளிட்ட பகுதிகளில் இவை மீட்கப்பட்டன..

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இரசாயன கலவையினால் இவை இறந்திருக்கலாமென பிரதேசவாசிகள் குறிப்பிடுகிறார்கள். எனினும், தொடர்புடைய அரச நிறுவனம் எதுவும் இதுவரை அது பற்றி குறிப்பிடவில்லை.