தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர் உயிரிழப்பு!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நிலையில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தப்பிக்க முயற்சித்த போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வடக்கு பாணந்துறை, வத்தல்பொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.