யாழ் அரசடி பகுதியில் 55 பேருக்குக் கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், நல்லூர்-அரசடி பகுதியில் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 156 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதி கடந்த மாதம் முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் வசிக்கும் 156 பேருக்குப் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.