கம்போடிய நாட்டில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றிய எலிக்கு தங்கப்பதக்கம்!

கம்போடிய நாட்டில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றிய எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆப்பிரிக்க எலி வகை மாகவா என்னும் எலி வகை நிலக்கண்ணி வெடிகளை அகற்றக்கூடியது, அந்த எலியை கம்போடியா நாட்டுக்கு கொண்டு வந்து கடந்த ஏழு வருடங்களில் 39 நிலக்கண்ணி வெடிகளை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிக்காத 28 பொருட்களையும் மாகவா அகற்றியுள்ளதுடன் மேலும், 1 லட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர அடிகளை மாகவா தோண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 20 கால்பந்து ஆடுகளங்களுக்கு சமமானது, எனவே எலியின் இந்த அரும்பணியை பாராட்டும் விதமாக இங்கிலாந்தின் கால்நடை அமைப்பு மாகவா எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது