தமிழகத்தில் 847 பேருக்கு கரும்பூஞ்சை நோய்!

தமிழகத்தில் இதுவரை 847 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையைத் தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்று பாதிப்பும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கரும்பூஞ்சை பாதிப்பு குறித்து ஆராய சிறப்பு நிபுணர் குழுவொன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தின் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.