கன மழை காரணமாக கம்பஹாவின் பல இடங்கள் நீரில் மூழ்கின!

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமா கம்பஹா மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று பெய்த கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளன.

இந்த மாவட்டத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

அதேநேரம், அந்த மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களால் 13 பிரதேச பிரிவுகளில் 39 ஆயிரத்து 742 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.