பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேராக மோதி கோர விபத்து 30க்கும் மேற்பட்டோர் பலி பலர் படுகாயம்!

தெற்கு பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று (திங்கட்கிழமை) சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில், சிந்து மாகாணத்தில் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் விபத்து நடந்ததிலிருந்து பல மணிநேரங்கள் கடந்தும் அணுக முடியாத ரயில் பெட்டிகளில் சிலர் இருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக மூத்த மாவட்ட பொலிஸ்துறை அதிகாரி உமர் துஃபைல் தெரிவித்துள்ளார்.

தற்போது மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.