யாழில் பிரபல மதுபான உற்பத்தி நிறுவத்தின் பெயரில் தயாரிக்கப்படும் போலி சாராயம் – குடிமகன்களுக்கு எச்சரிக்கை

யாழ்.கோப்பாயில் பிரபல மதுபான உற்பத்தி நிறுவத்தின் பெயரில் போலிச் சாராயத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்துவந்த வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனிப் பாணி, எதனோல், எசன்ஸ் உள்ளிட்டவை உள்ளீடுகளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட போலி சாராயம் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

கோப்பாய் ஜிபிஎஸ் வீதியில் வீடு ஒன்றிலேயே இந்த போலி சாராய உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 14 போத்தல்கள் போலி சாராயம் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களிடமிருந்து 140450 பணமும் கைப்பற்றப்பட்டன.