திருகோணமலையில் உணவின்றி அலைந்து திரியும் மான்கள்

திருகோணமலையில் பிட்டெரிக் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள மான்கள் சரணாலயத்தில் வாழும் மான்களுக்கும், தற்சமயம் “கோவிட் பயனத்தடை “ காரணமாக மேலதிகமாக உணவு தேடி திருகோணமலை வீதிகளில் அலைந்து திரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக அங்குள்ள மான்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு அளிக்கப் பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பயணத்தடையின் காரணமாக அவற்றுக்கு உணவு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்சமயம் அரசிடம் விசேட அனுமதி பெற்று உணவு அளிக்கும் செயல்பாடு மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை திருகோணமலையில் வாழும் மற்றும் இங்கு வரும் மக்கள், தங்களால் முடிந்தளவு மான்கள் சரணாலயத்துக்கு நேரில் சென்று உணவு அளித்து எங்கள் மண்ணில் வாழும் இவ் அரிய உயிரினத்தைப் பாதுகாக்க முன்வருமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.