வல்வெட்டித்துறை மயானத்தில் தங்க நகை தேடி அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!

வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் சந்தேக நபர்கள் இருவரும் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்றில் தங்க நகை இருப்பதாக கூறி அகழ்வில் ஈடுபட்டிருந்த போதே வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

​சம்பவ இடத்தில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.​