வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000யை கடந்தது!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000யை கடந்துள்ளதுடன் இதுவரை 17பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் நேற்று வரையான காலப்பகுதியில் வவுனியாவில், 1040பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானோர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.