யாழில் கழிப்பிட வசதியின்றி காலைகடனுக்காக வெளியில் சென்றவரை மிருகத்தனமாக தாக்கிய இராணுவம்!

யாழ்‌.புன்னாலைக்கட்டுவன்‌ வடக்கு – கப்பன்புலப்‌ பகுதியில்‌ காலை கடனை கழிக்க

சென்ற அவர்‌ மீது வீதியால்‌ வந்த இராணுவத்தினர் தாக்கியதாக

குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம்‌ தொடர்பில்‌ பாதிக்கப்பட்டவர்‌ தெரிவிக்கையில்‌,

உடுவில்‌ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புன்னாலைக்கட்டுவன்‌ வடக்கு கப்பன்புலப்‌

பகுதியில்‌ சுமார்‌ 10 மேற்பட்ட குடும்பங்கள்‌ மலசலகூடம்‌ இன்றி வாழ்ந்து வருவதாகவும்‌

தமது காலைக்‌ கடன்களை நிறைவேற்ற சிலர்‌ அருகிலுள்ள

பனம்‌ காணிக்கு சென்று வருவது வழக்கமாக கொண்டுள்ளதாகவும்‌,இவ்வாறான

நிலையில்‌ இன்றைய தினம்‌ திங்கட்கிழமை காலை காலைக்‌ கடனை கழித்துவிட்டு வீடு

நோக்கி வந்த போது வீட்டின்‌ அருகே நின்ற பாதுகாப்பு தரப்பினர்‌ எங்கு சென்று

வருகிறாய்‌

என விசாரித்ததாகவும்‌,விசாரித்த சமயம்‌ பின்னால்‌ வந்த இராணுவத்தினர் ஒருவர்‌

‘ஓடு வீட்ட’ என கூறியபடி என்னை கேபிள்‌ ஒன்றினால்‌ தாக்கியதாகவும்‌ கூறியுள்ளார்‌.

இறுதி யுத்தத்தில்‌ எனது ஒரு காலை துப்பாக்கி குண்டு துளைத்த நிலையில்‌

தலையில்‌ துப்பாக்கிச்‌ சன்னம்‌ காணப்படுகிறது. இவ்வாறு யுத்தத்தில்‌ பாதிக்கப்பட்டு

புன்னாலைக்கட்டுவன்‌ பகுதியில்‌ குடியேறிய தனக்கு இன்றுவரை மலசலகூடம்‌

அமைப்பதற்கு ஏற்ற வசதி இல்லாமல்‌ வாழ்ந்து வருவதாகவும்‌

அதிகாரிகள்‌ தனது நிலை குறித்து எவ்விதமான நடவடிக்கையும்‌ எடுக்காத

நிலையில்பாதுகாப்பு தரப்பினர்‌ என்னைத்‌ தாக்கியது எனக்கு மிகுந்த மன வேதனை

தருவதாக அவர்‌ மேலும்‌ தெரிவித்தார்‌.