சமூக ஊடக தளங்களில் தவறான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை!

சமூக ஊடக தளங்களில் தவறான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) ஒரு சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளது.

இது கோவிட் அல்லது வேறு ஏதேனும் முக்கியமான பிரச்சினை தொடர்பான தவறான தகவல்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தவறான தகவல்களை உருவாக்கி பகிர்ந்துகொள்பவர்கள் மீது குழு கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கால கட்டத்தில் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.இந்த போலி செய்திகள் காரணமாக பொது செயற்பாடுகளில் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன.

எனவே, செய்தி தொடர்பாக போலி பதிவுகளை பகிருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கை காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இதுபோன்ற போலி செய்திகளைப் பற்றிய தகவல்களைப் பெற இணைய இடத்தில் ரோந்து செல்வதற்காக சிறப்பு குழுவை நியமிக்க சிஐடிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98 வது பிரிவைப் பொறுத்தவரை, ஒருவர் போலிச் செய்திகளைப் பரப்புவதன் மூலம் ஒரு பீதி சூழ்நிலையை உருவாக்கினால் அது குற்றமாகும்.

இது தவிர தண்டனைச் சட்டத்தின் கீழ் எந்தவொருவரும் மத ஒற்றுமை அல்லது இன ஒற்றுமையை சீர்குலைத்தால் அது பொது மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் குற்றமாகும்.

எனவே, போலி செய்திகளை உருவாக்குவோர் மீது இலங்கை காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.