சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்தோடு இதனடிப்படையில், சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 55 ஆயிரத்து 428 குடும்பங்களைச் சேர்ந்த 219,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.