இலங்கையில் கல்விக்கான போராடும் மாணவர்களின் நிலை!

உலக நாட்டுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முற்றிலுமாக அனைத்து துறைகளிலும் முடங்கியுள்ளன.

குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அவர்களுக்கு பெரிதும் பழக்கமில்லாத ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தும் முறையில் பெரிதும் ஆர்வமில்லாமல் குழந்தைகள் உள்ளனர்.

மேலும் இந்த சூழலில் இலங்கையில் சிறுவர்கள் பலர் தங்களது ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக சரியான வலைப்பின்னல் (network) கிடைக்காமல் வீட்டின் கூரைகள் மீதும், அருகில் உள்ள வாகனத்தின் மீதும் ஏறி வலைப்பின்னலுக்கு அவதிப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.