தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானம்!

பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஒன்லைன் வங்கியைப் பயன்படுத்துமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன.

பெரும்பாலான தனியார் வங்கிகள் ஜூன் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டு திங்களன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவித்துள்ளன.

அதன்படி, கொமர்சியல், சம்பத், செலான், DFCC, நேஷன் டிரஸ்ட், அமானா மற்றும் யூனியன் வங்கிகள் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளன.

அத்துடன் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) ஹட்டன் நெஷனல் வங்கியின் கிளைகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் ஜூன் 14ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.