புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை தொழிற்சாலை பேருந்தை திருப்பிய மூவர் கைது!

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை சுதந்திரம் பகுதியில் மக்கள் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து பேருந்துகளை திருப்பி அனுப்பிய மூன்று பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்வேறு எதிர்ப்புக்கு க்கு மத்தியில் இன்று புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் மிக குறைவான ஊழியர்களே பணிக்கு சமூகமளித்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை குறித்த ஆடைத் தொழிற்சாலையை மூட எடுத்த முயற்சிகள் பயனளிக்காத நிலையில், ஊழியர்களை கடமைக்கு செல்லாமல் தவிர்க்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்ற2னர்.

இதேவேளை நேற்று காலை புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பேருந்தை மறித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பத்து பேர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.