சதொச ஊடாக சலுகை விலையில் பொருட்களை வழங்க அனுமதி!

துறைமுகத்தினால் விடுக்கப்படாத மற்றும் சுங்கப் பிரிவினரால் அரசுடைமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு சலுகை விலையில் விநியோகிப்பதற்காக சதொசவிடம் கையளிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

இதனூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.