முதலையுடன் போராடி நபர் ஒருவரின் உயிரை மீட்ட பௌத்த பிக்கு!

ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவரை முதலை கவ்விக் கொண்டு சென்ற போது உடனடியாக ஆற்றில் குதித்த பௌத்த பிக்கு ஒருவர், அந்த நபரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

கஹடகஸ்திலியவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

தியமயலவகஸ்வெவ ஸ்ரீ தர்மராஜா விஹாரையைச் சேர்ந்த 30 வயதான பெல்லன்தெனிய பியானந்த தேரரே இவ்வாறு நபர் ஒருவரின் உயிரை மீட்டுள்ளார்.

70 வயதான ஜே.எம். விஜேரட்ன என்ற நபரையே முதலை கவ்விச் சென்றிருந்தது.

குறித்த நபரை முதலை கவ்விச் சென்றதை பார்த்த பௌத்த தேரர் உடனடியாக ஆற்றில் குதித்து முதலையுடன் போராடி அந்த நபரை கரைக்கு இழுத்து வந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் விஜேரட்ன என்ற முதலையினால் கவ்விச் செல்லப்பட்ட நபரின் காலுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், பௌத்த பிக்குவிற்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது உயிரை பணயம் வைத்து இவ்வாறு முதலையுடன் போராடிய பௌத்த தேரருக்கு பிரதேச மக்கள் பாராட்டு தெரிவிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.