காட்டுப்பன்றி என நினைத்து நபர் ஒருவர் சுட்டுக்கொலை!

மாத்தளை – றத்தோட்டையில் இன்று காட்டுப்பன்றி என நினைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.


மிளகு பயிற்செய்கை காணிக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் மீது, காணி உரிமையாளர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் துப்பாக்கியுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில் காணிக்குள் காட்டுப்பன்றி நுழைந்துவிட்டதோ என்ற சந்தேகத்தில் தாம் பிரயோகம் செய்ததாக குறித்த நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.