யாழ்.மிருசுவில் பிள்ளையார் கோவிலை இடித்த விசமிகள்!

யாழ்.மிருசுவில் பகுதியில் வீதியோரமாக அமைந்திருந்த சிறிய பிள்ளையார் கோவில் நேற்றய தினம் இரவு விசமிகளால் இடிக்கப்பட்டிருக்கின்றது.

கொடிகாமம் – மிருசுவில் இடையில் சிறிய பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் மக்கள் அவதானித்தபொது

ஆலயம் இடிந்து காணப்படுகின்றமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.