ஒரே நாளில் அதிகூடிய கொரொனா இறப்பு நேற்று – 50 ஐ கடந்த எண்ணிக்கை

சிறிலங்காவில் மேலும் 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.

இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும்.

இந்த மரணங்கள் கடந்த மே 10ஆம் திகதி முதல் ஜூன் ஏழாம் திகதிவரை நிகழ்ந்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில், 32 ஆண்களும் 22 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 843ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.