யாழ் பல்கலையின் வவுனியா வளாகம் புதிய பல்கலைக்கழகமாக பிரகடனம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது