கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கட்டுப்பாட்டில் தளர்வு!

நாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய பரிந்துரைகளின்படி, பயணக் கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.

இதேவேளை தனிமைப்படுத்தலில் இருந்து 77 கிராம அலுவலகர் பிரிவுகள் தளர்த்தப்பட்டாலும் அங்கு உள்ளவர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.