தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட சிலரிடம் 1,000 ரூபாய் கட்டணம் அறவீடு!

கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட சிலரிடம் 1,000 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த 1,000 ரூபாய் கட்டணத்தை வழங்கிய பலர் இது குறித்து தன்னிடம் தகவல் வழங்கியுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பாக விசாரணை அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு கருத்துக்களை தெரிவித்து அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை நாசப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என தெரிவித்த சரத் பொன்சேகா, இந்த நடவடிக்கை ஒரு பயனுள்ள முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.