இணையத்தில் விளம்பரம் செய்து, 15 வயது சிறுமியை விற்ற கொடூரன்!

இணையத்தில் விளம்பரம் செய்து, 15 வயது சிறுமியை விற்ற நபர் ஒருவர் கல்கிஸ்ஸ காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கல்கிஸ்ஸ பிரதேச தொடர்மாடி வீடொன்றை வாடகைக்கு எடுத்து, குறித்த சிறுமியை அங்கே தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் புகைப்படத்துடன் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு அமைய, பிரிதொரு நபருக்கு அச்சிறுமி விற்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட சிறுமி, தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும், சிறுமியின் தாயாரிடமிருந்தே, சந்தேகநபர் சிறுமியைப் பெற்று கல்கிஸ்ஸ பிரதேசத்துக்கு அழைத்து வந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில், சிறுமியின் தாயாரிடம் காவற்துறையினர் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்