யாழ். காரைநகரில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் ஊரி பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக அப்பகுதி கிராம சேவையாளருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீடு முற்றுகையிடப்பட்டது.

அதன் போது வீட்டின் அறை ஒன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம்பெற்றதை கண்டறிந்து, வீட்டில் இருந்தவரை கைது செய்தனர்.

அத்துடன் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் v