யாழில் மணல்கடத்தல்காரர்களை சுற்றிவளைத்த இராணுவம்!! உழவுஇயந்திரம் சேதம்!

யாழ்.சாவகச்சோி – கச்சாயில் கள்ள மணல் ஏற்றிய கும்பல் இராணுவத்தை கண்டதும் தப்பியோட
முற்பட்டபோது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மணல் ஏற்றிய உழவு இயந்திர சக்கரம்
உடைந்து சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்
தெரியவருவதாவது, கச்சாய் பகுதியிலும் சட்டவிரோத மணல் அகழ்வில் சிலர் ஈடுபட்டு வருவதாக

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடத்தல்
இடம்பெற்ற பகுதிக்கு இராணுவத்தினர் சென்றபோது மணல் கடத்தல் கும்பல் கரகர உழவு
இயந்திரத்தை செலுத்திக் கொண்டு

தப்பி ஓட முற்பட்டது. இந்நிலையில் உழவு இயந்திரத்தின் முன்பக்க சக்கரம் ஒன்று உடைந்த
நிலையில் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.