வரிசையை மீறி தடுப்பசி பெற்ற எம்.பியின் மனைவி – அதிகார துஸ்பிரயோகத்தால் வைரலாகும் புகைப்படம்

அரசியல்வாதி ஒருவரது மனைவி வரிசை முறையை மீறி கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட சம்பவம் குருநாகலையில் இடம்பெற்றுள்ளது.

குருநாகல் மாவட்ட அரசியல்வாதி ஒருவரது மனைவி குறித்த அரசியல்வாதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரின் உதவியுடன், கொவிட் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு வரிசையில் நிற்காமல் வந்து தடுப்பூசி பெற்றுக் கொண்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கின்றது.

இவ்வாறு தடுப்பூசி பெற்றுக்கொள்ள வந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது மனைவி என்றும் கூறப்படுகின்றது.