வயலுக்கு காவலுக்கு சென்ற 56 வயது நபரொருவர் சடலமாக மீட்பு!

​நேற்று இரவு தனது வயலுக்கு காவலுக்கு சென்ற பொன்னுதுத்துறை கெளரிதரன் என்ற 52 வயது மதிக்கத் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காக்கி உயிரிழந்துள்ளார்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை மனித பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில் பல உயிர் இழப்புகளும் சம்பவித்த வண்ணமே உள்ளது.

குறித்த சடலம் செங்கலடி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது