இவ்வருட இறுதி அல்லது 2022 ஆரம்பத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி!

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பதிற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், கொரோனா தொற்று காரணமாக நாட்டின் முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில் உலக நாடுகளுடன் பொருளாதார, இராஜதந்திர மற்றும் சுமூகமான உறவுகளைப் பேண வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொற்றுநோயை கட்டுப்படுத்தல், பொருளாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவது என்பது மிகப்பெரிய சவாலான விடயம் என்றும் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.