யாழ். மாவட்டத்தில் சிறார்கள் 08 உட்பட 44 புதிய தொற்றாளர்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்த 08 சிறார்கள் உட்பட்ட 44 பேர் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 233 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில்,

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர் (12 வயதுடைய சிறுமி ஒருவர், 10, 15, 16 வயதுகளை உடைய சிறார்கள் 04 பேர் உள்ளடக்கம்)

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேர் (04 வயதுடைய சிறுவன், 08 வயதுடைய சிறுமி ஆகிய சிறார்கள் இருவர் உள்ளடக்கம்)

நல்லூர் சுகாரதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர் (08 வயதுடைய சிறுவன் உள்ளடக்கம்)

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் (15 வயதுடைய சிறுமி உள்ளடக்கம்) தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.