யாழ்.மாவட்டத்திலிருந்து மீன் ஏற்றிச் சென்ற வாகனத்தில் கஞ்சா சிக்கியது!

மீன் ஏற்றுமதியாளர் என கூறி 4 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ்பபாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி மீன் ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.அனுராதபுரம் நோக்கி பயணித்த குறித்த வாகனத்தை ஆனையிறவு சோதனைச்சாவடியில்

விசேட அதிரடிப்படையினர் சோதனைக்குட்படுத்தினர். இதன்போது சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 4200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதியை மீட்டனர்.

குறித்த சம்பவத்துடன் கடத்தல் தொடர்புடைய வாகன சாரதி மற்றும் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன்,

வாகனமும் கைது செய்யப்பட்ட நபரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.