யாழில் அதிகாலை 5 மணிக்கே வீதியோரத்தில் கசிப்பு வியாபாரம்!

யாழ்.மானிப்பாய் – சங்கானை வீதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மானிப்பாய் – சங்கானை தேவாலய வீதியில் கசிப்பு காச்சி

விற்பனையில் ஈடுபட்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டர். இவரிடம் இருந்து 15லீற்றர் கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணம்

மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீட்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டவரை மேலதிக விசாரனைக்காக மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.