மட்டக்களப்பில் யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை பலி!

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (08) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 53 வயதுடைய பொண்ணுத்துரை கௌகிகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

வயல் காவலில் ஈடுபட்டிருந்த போதே, யானைத் தாக்குதலுக்கு குடும்பஸ்தர் இலக்காகியுள்ளார்.

Advertisement

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.