யாழில் இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து இரத்ததான முகாமொன்றை யாழ்.மாவட்டத்தில் நடத்தவுள்ளது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை மாதம் முதலாம் திகதி காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது.

யாழ்.மாவட்ட மக்கள் உயிர்க்காக்கும் இரத்ததான நிகழ்வில் பங்குபற்றுமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

தற்போது நாட்டில் நிலவும் பயணதடை காரணமாக இந்த இரத்ததான நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்புவோர் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் (077 039 9119) முன்கூட்டியே தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன மேற்கொள்ளும் என அதன் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.