மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 533 ஆக அதிகரிப்பு!

மன்னார் மாவட்டத்தில் இம் மாதம் 10 நாட்களுக்குள் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 533 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை (10) கருத்து தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரை 533 கொரோனா தொற்றாளர்களும்,இந்த வருடம் 516 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட 187 பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பரிசோதனை முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous articleகொவிட் தொற்றால் கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,388பேர் பாதிப்பு- 52பேர் உயிரிழப்பு!
Next articleவவுனியாவில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது தாக்குதல்!