கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோய்: இதுவரை 6 பேர் பலி

உலகளாவிய ரீதியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், மூளையைத் தாக்கும் மர்ம நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மர்ம நோயால் இதுவரை 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த மர்ம நோய்க்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

தூக்கமின்மை, நினைவுத்திறன் குறைதல், பிரமை உள்ளிட்டவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக காணப்படுகின்றது.

உயிரிழந்தவர்களை காண்பது போன்ற பிரமைகளும் இந்த நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படுகிறதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நோய்க்கான காரணம் தெரியாததால் அந்நாட்டு மருத்துவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன், இது தொடர்பாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நோய் அச்சமூட்டும் விதமாக இருப்பதாக கனடா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

புதிய மற்றும் அறியப்படாத இந்த மர்ம நோய் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நியூ பிரன்சுவிக்கில் வசிப்பவர்கள், நரம்பியல் நோயாக இருக்க வாய்ப்புள்ள இந்த நோய் குறித்து அச்சம் மற்றும் குழப்பம் அடைந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன் என தெரிவித்துள்ளார்.

Previous articleவவுனியாவில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது தாக்குதல்!
Next articleஎக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியேறிய 1,000 தொன் கழிவுகள் மீட்பு!