எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியேறிய 1,000 தொன் கழிவுகள் மீட்பு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியான சுமார். 1,000 தொன் கழிவுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறு சேகரிக்கப்பட்ட கழிவுகளில் அநேகமான கழிவுகள், வத்தளையில் கொள்கலன்கள் தரித்து நிறுத்தப்படும் இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டு உள்ளன.

41 கொள்கலன்களில் இந்தக் கழிவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

மீதமுள்ள கழிவுகள், பொதி செய்யப்பட்டு கடற்கரைகளை அண்மித்து அமைந்துள்ள களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றை இன்றைய தினம் (10) கொள்கலன்களுக்கு மாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.