இலங்கையில் காற்றில் பரவும் கொரோனா? மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்று காற்றில் பரவி வருவதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றினால் பரவுகின்ற கொரோனா தொற்றின் திரிபடைந்த தொற்று பரவுகின்றமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்திருப்பதாவும், அது தற்போது இலங்கையில் ஊடுருவியிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார்.

எனவே தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக எந்த நேரமும் முகக் கவசத்தை அணிந்திருப்பது கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.