பிறந்து 8 நாட்களேயான சிசுவொன்று கொரோனா தொற்று!

இலங்கையில் பிறந்து 8 நாட்களேயான சிசுவொன்று கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த மே 27ஆம் திகதி உயிரிழந்த சிசுவின் பி.சி.ஆர் அறிக்கை நேற்று வெளியாகியுள்ள நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் நாட்டில் பதிவாகிய மிகக்குறைந்த வயதுள்ள குழந்தை மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇலங்கையில் காற்றில் பரவும் கொரோனா? மக்களுக்கு எச்சரிக்கை
Next articleதரம் 1 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சி கல்வி அறிமுகம்!