இரவு நேரத்தில் காணாமல் போன சிறுவன் ஒருவன் கிணற்றினுள் சடலமாக மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை ஐஸ்மோல் வீதியிலுள்ள கிணற்றிலிருந்து நான்கு வயதுச் சிறுவன் ஒருவனின் சடலம், இன்று (10) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய், தந்தையுடன் இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், சிறுவன் காணாமல் போயுள்ளதாகவும், பின்னர் நீண்ட நேரத்துக்குப் பிறகு சிறுவனைத் தேடிப் பார்த்த போது, கிணற்றினுள் உயிரிழந்த நிலையில் சிறுவன் காணப்பட்டதாகவும் பொலிஸாரிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

நான்கு பிள்ளைகளைக் கொண்ட தம்பதிகளின் மூன்றாவது பிள்ளையான நளீம் ஹாபில் எனும் சிறுவனே கிணற்றிலிருந்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleதரம் 1 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சி கல்வி அறிமுகம்!
Next articleயாழில் கஞ்சா வியாபாரத்தில் களமிறங்கிய பொலிசார் – காணொளி ஆதாரங்கள் உயர் மட்ட அதிகாரிகளிடம் சிக்கியது