யாழில் கஞ்சா வியாபாரத்தில் களமிறங்கிய பொலிசார் – காணொளி ஆதாரங்கள் உயர் மட்ட அதிகாரிகளிடம் சிக்கியது

யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பணியாற்றும் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கஞ்சா விற்பனை செய்து சிக்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்.மாவட்டத்திற்கு கடற்பகுதி ஊடக கொண்டுவரப்படும் கஞ்சா பிடிபடும் நிலையில் அவ்வாறு பிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகளில் திருடிய கஞ்சாவை விற்பனை செய்ததாக அறிய முடிகிறது.

4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் காணொளி ஆதாரங்கள் பொலிஸ் உயர் மட்டங்களுக்கு காண்பிக்கப்பட்டதாக அறியக் கிடைத்துள்ளது.இந்நிலையில் உள்ளக விசாரணைகள் இடம்பெற்றதாகவும் குறித்த 4 பொலிஸாரில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.​

Previous articleஇரவு நேரத்தில் காணாமல் போன சிறுவன் ஒருவன் கிணற்றினுள் சடலமாக மீட்பு!
Next articleமாகல்கந்தே சுதத்த தேரருக்கு கொரோனா!