தீ விபத்துக்குள்ளான X-PRESS PEARL கப்பல் செய்மதி படங்கள் வெளியாகின!

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி – எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காணப்படுகின்ற இடத்திற்கு அண்மித்த கடல் பகுதியில் எண்ணெய்யை ஒத்ததான படலங்களை செய்திமதியின் ஊடாக காண முடிகின்றதாக MARINE POLLUTION SURVEILLANCE REPORT என்ற அறிக்கையின் ஊடாக அறிய முடிகின்றது.

கடந்த 7ம் திகதி செய்மதியின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படங்களின் ஊடாக இந்த படலங்களை காண முடிகின்றது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள எண்ணெய் படலங்கள், சுமார் பல நூற்றுக்கணக்காக மீற்றர் தொலைவிற்கு செய்மதி படத்தின் ஊடாக காண முடிகின்றது.

இந்த கப்பலில் 350 டொன் எரிப்பொருள் காணப்படுவதாகவும், கப்பலிலுள்ள எரிப்பொருள் கசியுமாக இருந்தால், இலங்கை கடல்வளத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும் எனவும் INTERNATIONAL CHARTER SPACE AND MAJOR DISASTERS இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த கப்பலின் பின்புற பகுதி சுமார் 21 மீற்றர் மூழ்கியுள்ளதுடன், கடலின் நில மட்டத்தில் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பலின் முன்பக்கம் மெதுவாக மூழ்கி வருவதாகவும் அறிய முடிகின்றது.

குறித்த கப்பலில் 25 டொன் நையிட்ரைஜன் திரவம் உள்ளிட்ட 1,486 கொள்கலன்கள் காணப்பட்டது. கடந்த மாதம் 20ம் திகதி இந்த கப்பல் கொழும்பிலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் தீ விபத்துக்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சுமார் இரு வாரங்களுக்கும் அதிக நாட்கள் முயற்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியாவில் 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
Next articleநடமாட்டக்கட்டுப்பாடு கட்டாயமாக 14ஆம் திகதி தளர்த்தப்படும்!