கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்தவர் சடலமாக மீட்பு!

புதுக்குடியிருப்பு – ஆனந்தபுரத்திலிருந்து நேற்று கடற்றொழிலுக்காக நந்திக்கடலுக்கு சென்றவர் காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல்போனவரை உறவினர்கள் தேடிச் சென்றிருந்த நிலையில் இன்று மாலை பச்சைப்புல்மோட்டை வயல்பகுதியில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உந்துருளியில் பயணித்த இவர் உந்துருளியுடன் உடலமாக காணப்பட்டுள்ளார். ஆனந்தபுரம் பகுதியினை சேர்ந்த 44 அகவையுடைய 5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ்

என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலம் பிரோத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படவுள்ளதுடன்

இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்