யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இரு பொலிஸாருக்கு கொரோனா தொற்று!


யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இரு பொலிஸாருக்கு கொரோனா தொற்று! அவர்களுடன் பணியாற்றிய பொலிஸாருக்கு தனிமைப்படுத்தல் இல்லையா?
யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இரு பொலிஸாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில்

குறித்த பொலிஸாரோடு ஒன்றாக இருந்த ஏனைய பொலிஸாரை அவர்களின் வீடுகளுக்கே செல்லுமாறு பொறுப்பதிகாரி பணித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒன்றாக தங்கியிருந்து பணியாற்றிய 11 பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்

இருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸாரோடு ஒன்றாக தங்கியிருந்து பணியாற்றிய

ஏனைய 9 பொலிஸாரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் அவர்களின் வீடுகளுக்கு செல்லுமாறு பொறுப்பதிகாரி பணித்துள்ளார்.

இந்நிலையில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாம் தனிமைப்படுத்தப்படாமல் வீடுகளுக்கு செல்வதற்கு பெரும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸாரோடு தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்த சுகாதாரப் பகுதியினரும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை

என ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்