கொடுப்பணவுகளை பெற்றுக்கொள்வதற்காக நெடுநேரம் காத்து கொண்டிருந்த முதியோர்கள்!

முதியோர் கொடுப்பணவினைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று பொரளை அஞ்சல் நிலையத்தில் முதியோர்கள் காத்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடெங்கிலும், கடுமையான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைக்கருதி 5000ரூபா கொடுப்பணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில், முதியோர் கொடுப்பணவினைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று பொரளை அஞ்சல் நிலையத்தில் முதியோர்கள் காத்து கொண்டிருந்து தமது கொடுப்பணவுகளை பெற்றுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.